உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சாந்தோமில் போக்குவரத்து மாற்றம்

சாந்தோமில் போக்குவரத்து மாற்றம்

சென்னை, சாந்தோம் நெடுஞ்சாலை - காரணீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பில், கலங்கரை விளக்கம் மெட்ரோ நிலைய கட்டுமானப் பணி மேற்கொள்ளப்பட உள்ளதால், நாளை முதல் ஒரு வார காலத்திற்கு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளது. காந்தி சிலையில் இருந்து, சாந்தோம் நெடுஞ்சாலை நோக்கி வரும் வாகனங்கள் அனைத்தும், கலங்கரை விளக்கம் சந்திப்பில் இடதுபுறம், லுாப் சாலை வழியாக திருப்பி விடப்படும்.காரணீஸ்வரர் கோவில் தெரு சந்திப்பிலிருந்து வரும் வாகனங்கள், கட்டாயம் இடதுபுறம் திரும்பி, கலங்கரை விளக்கம் வழியாக செல்லலாம். காரணீஸ்வரர் கோவில் தெருவில் இருந்து பாபநாசம் சிவன் சாலை சந்திப்பு நோக்கி, வாகனங்கள் செல்ல அனுமதியில்லை லுாப் சாலை மற்றும் சாந்தோம் நெடுஞ்சாலை, அடுத்த மூன்று மாதங்களுக்கு ஒருவழிப் பாதையாக செயல்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ