ஐ.பி.எல்., கிரிக்கெட் போட்டி நடக்கும் நாட்களில் போக்குவரத்து மாற்றம் -
சென்னை, சென்னை, சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், மார்ச், 28, ஏப், 5, 11, 25, 30, மே 12 ஆகிய நாட்களில், ஐ.பி.எல்., போட்டி நடக்கிறது.இப்போட்டி நடக்கும் நாட்களில், மாலை 5:00 மணி முதல் இரவு 11:00 மணி வரை போக்குவரத்து மாற்றப்படுகிறது.இதுகுறித்து காவல் துறை அறிக்கை:* விக்டோரியா விடுதி சாலை செல்ல, பாரதி சாலை வழியாக மட்டுமே வாகனங்கள் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை.* பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக இயக்கப்படும். பாரதி சாலையில் இருந்து பெல்ஸ் சாலை செல்ல வாகனங்கள் அனுமதிக்கப்படும். வாலாஜா சாலையில் இருந்து செல்ல அனுமதி இல்லை.* ரத்னா கபேவிலிருந்து காமராஜர் சாலை நோக்கிச் செல்லும் அனைத்து வாகனங்களும், பெல்ஸ் சாலை மற்றும் வாலாஜா சாலையில் திருப்பிவிடப்படும். வாகன நிறுத்தம்
* வாகன நிறுத்ததிற்கான அனுமதி அட்டை வைத்திருப்போர், வாகன அனுமதி அட்டையில் குறிப்பிட்டுள்ள இடத்தில், தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.* அனுமதி அட்டை இல்லாத வாகன ஓட்டிகள், கதீட்ரல் சாலை மற்றும் ஆர்.கே.,சாலை வழியாக காமராஜர் சாலை சென்று, மெரினா கடற்கரை அணுகு சாலையில் தங்களது வாகனங்களை நிறுத்திக் கொள்ளலாம்.* போட்டியை காண கால் டாக்சி, ஆட்டோ போன்ற வணிக வாகனத்தில் வருவோர், அண்ணா சாலையிலிருந்து வாலாஜா சாலைக்குள் சென்று, மைதானத்திற்கு அருகில் இறக்கிவிடப்பட்டு, வாகனங்கள் சிவானந்தா சாலையில் நிறுத்த அனுமதிக்கப்படும்.* வாலாஜா சாலையில் கூடுதலாக மாநகர பேருந்துகள் மற்றும் சிறப்பு பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது. அவ்வாகனங்கள் சுவாமி சிவானந்தா சாலையில் மட்டுமே பயணியரை ஏற்றி, இறக்கிவிட அனுமதிக்கப்படும். பொதுமக்கள், பிரஸ் கிளப் சாலை வழியாக மைதானத்திற்கு அடையலாம்.பொதுமக்கள் மேம்பால ரயில், மெட்ரோ ரயில் வாயிலாக மைதானத்திற்கு வருமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும், காவல் துறை தெரிவித்துள்ளது.