பூந்தமல்லி - பரங்கிமலை சாலையில் தொடரும் போக்குவரத்து நெரிசல்
நந்தம்பாக்கம், நந்தம்பாக்கம் பகுதியில், பாதாள சாக்கடை திட்டத்திற்காக, பரங்கிமலை - பூந்தமல்லி பிரதான சாலையின் நடுவே, குழாய் பதிக்கும் பணிகள், இரவு நேரத்தில் நடந்து வருகின்றன.சில நாட்களாக, நந்தம்பாக்கம், வர்த்தக மையம் உள்ள பகுதியில் குடிநீர், பாதாள சாக்கடை திட்டத்திற்கான குழாய் பதிக்கப்பட்டது. அதற்காக தோண்டிய பள்ளம் முறையாக மூடப்படவில்லை.இதனால், தோண்டிய பள்ளத்தில் தண்ணீர் தேங்கி, சாலை உள்வாங்குவதால், கடும் நெரிசல் ஏற்படுகிறது. மேலும், மெட்ரோ ரயில் திட்டப் பணியால் சாலை குறுகி, வாகன ஓட்டிகள் தவிக்கின்றனர்.போக்குவரத்து நிறைந்த பிரதான சாலை என்பதால், திட்ட பணிகளை போர்க்கால அடிப்படையில் விரைந்து முடித்து, சாலையை உடனடியாக சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.