இந்தியா - இங்கிலாந்து டி-20 வரும் 25ல் ரயில் சேவை மாற்றம்
சென்னை, 'டி - 20' கிரிக்கெட் போட்டியொட்டி, கடற்கரை - வேளச்சேரி தடத்தில் மூன்று மின்சார ரயில்களின் சேவை நேரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது.சென்னை ரயில் கோட்டம் நேற்று வெளியிட்ட அறிக்கை:சென்னை சேப்பாக்கத்தில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில், வரும் 25ம் இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 'டி - 20' கிரிக்கெட் போட்டி நடக்க உள்ளது. போட்டியை காண வரும் ரசிகர்களின் வசதியாக, மூன்று மின்சார ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுகடற்கரை - வேளச்சேரி இரவு 9:50 மணி மேம்பால ரயில் ரயில் இரவு 10:00 மணிக்கும், இரவு 10:20 மணி ரயில், இரவு 10:30 மணிக்கு புறப்படும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதுவேளச்சேரியில் இருந்து இரவு 10:00 மணிக்கு புறப்படும் மேம்பால ரயில், சேப்பாக்கம் ரயில் நிலையத்தில் 10 நிமிடங்கள் நின்று செல்லும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.