உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / நான் முதல்வன் ஆசிரியர்களுக்கு பயிற்சி துவக்கம்

நான் முதல்வன் ஆசிரியர்களுக்கு பயிற்சி துவக்கம்

சென்னை, டிச. 4--தமிழக உயர்கல்வி துறை, திறன் மேம்பாட்டு துறை உள்ளிட்டவற்றின் சார்பில், உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு, வேலை வாய்ப்பு சார்ந்த பயிற்சியை அளிக்க, 'நான் முதல்வன்' திட்டம் கடந்தாண்டு துவங்கப்பட்டது.மாணவர்களின் தனித்திறமைகளை அடையாளம் கண்டு, அவர்களுக்கு வழிகாட்டும் வகையில், இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில், இரண்டாம் பருவம் துவங்கியுள்ள நிலையில், அனைத்து மாணவர்களுக்கும் பிழையில்லாமல் ஆங்கிலம் பேச, எழுத பயிற்சி அளிக்கும் வகையில், ஆங்கில பேராசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி, நேற்று துவங்கியது. சென்னை பல்கலையின் கீழ் இயங்கும், 116 கல்லுாரிகளின் ஆங்கில பேராசிரியர்களுக்கு, பல்கலை வளாகத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது. இதேபோல், ஒவ்வொரு பாடத்திற்கும் பயிற்சி அளிக்கப்படும். அவர்கள் வழிகாட்டிகளாக செயல்பட்டு, மாணவர்களை வழிநடத்துவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை