உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை /  மின்மாற்றி தீப்பொறி விழுந்து காயலான் கடை தீக்கிரை

 மின்மாற்றி தீப்பொறி விழுந்து காயலான் கடை தீக்கிரை

திருவேற்காடு: திருவேற்காடு அடுத்த வேலப்பன்சாவடி, பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையோரம், காயலான் கடை செயல்பட்டு வருகிறது. அதை திருவேற்காடைச் சேர்ந்த இன்பரசு, 33, என்பவர் நடத்தி வருகிறார். நேற்று காலை, கடை அருகே உள்ள மின்மாற்றியில் இருந்து தீப்பொறி விழுந்து, கடையில் உள்ள பழைய பொருட்கள் கொழுந்து விட்டு எரிந்தன. தகவலின்படி சம்பவ இடத்திற்கு வந்த பூந்தமல்லி தீயணைப்பு வீரர்கள், அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில், 10,000 ரூபாய் மதிப்புள்ள பழைய பொருட்கள் தீக்கிரையாகின. திருவேற்காடு போலீசார் விசாரிக்கின்றனர். இதே கடையில், கடந்த ஆக., மாதம் 27ம் தேதி, குப்பை எரிந்து தீ விபத்து ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி