மேலும் செய்திகள்
முதியவரிடம் ரூ.29,000 பறிப்பு
25-Apr-2025
சென்னை,:சென்னையை சுற்றிப்பார்க்க, ஸ்வீடன் நாட்டைச் சேர்ந்தவர் பீட்டர் மட்டியாஸ், 26 என்பவர் சில தினங்களுக்கு முன் வந்தார்.மயிலாப்பூரில் உள்ள விடுதியில் தங்கியிருந்தவர், 14ம் தேதி இரவு சாப்பிடுவதற்காக, வாடகை இருசக்கர வாகனத்தில், நுங்கம்பாக்கம் சுப்பராயன் தெரு வழியாக சென்றார்.அப்போது, இரண்டு திருநங்கையர் அவரை வழிமறித்து தாக்கி, 3,000 ரூபாயை பறித்துச் சென்றனர். இதுகுறித்து, நுங்கம்பாக்கம் போலீசார் விசாரித்து, ஓட்டேரியைச் சேர்ந்த பெலினா, 24, காசிமேடை சேர்ந்த லக்சிகா, 23 ஆகிய இருவரும் வழிப்பறி செய்தது தெரிய வந்தது.இருவரையும் கைது செய்த போலீசார், 3,000 ரூபாயை பறிமுதல் செய்தனர்.***
25-Apr-2025