பழங்குடியினர் ஆர்ப்பாட்டம்
சென்னை, விளிம்பு நிலை பழங்குடி நல கூட்டமைப்பின் சார்பில் நேற்று, எழும்பூர் ராஜரத்தினம் மைதானம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது.மாநில ஒருங்கிணைப்பாளர் ஜெயசங்கர் தலைமை வகித்தார். தொழில் இன்றி பாதிக்கப்படும் காலத்தில், விளிம்பு நிலை பழங்குடி மக்களுக்கு, மாதம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும். பழங்குடியினர் செய்யும் தொழிலுக்கு, 50 சதவீதம் மானியத்தில் மூலப்பொருட்கள் வழங்க வேண்டும்.வன உரிமைச் சட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டும். பழங்குடிகள் அரசியல் அதிகாரம் பெற ஒரே இடத்தில் குறைந்த பட்சம், 250 வீடுகள் குடியமர்த்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், ஏராளமானோர் பங்கேற்றனர்.