உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / அமெரிக்க பெண்ணிற்கு ஆன்லைன் வழியே பாலியல் தொல்லை: திருச்சி ஆசாமி கைது

அமெரிக்க பெண்ணிற்கு ஆன்லைன் வழியே பாலியல் தொல்லை: திருச்சி ஆசாமி கைது

சென்னை,சென்னை அண்ணா சாலையில் உள்ள அமெரிக்க துாதரக அதிகாரி, சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் அளித்த புகார்:அமெரிக்கா நாட்டைச் சேர்ந்த பெண்ணை, இணையதளத்தில் பின் தொடர்ந்து மர்மநபர் பாலியல் துன்புறுத்தல் செய்து வருகிறார். சில ஆண்டுகளாக ஆபாசமான புகைப்படங்களை அனுப்பி, கொலைமிரட்டல் விடுத்ததுடன், பணம் கேட்டு மிரட்டி வருகிறார். எனவே, சம்பந்தப்பட்டவர் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, புகாரில் கூறப்பட்டிருந்தது.இதுகுறித்து, மத்திய குற்றப்பிரிவு சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, விசாரணை நடத்தினர்.இதில், திருச்சியைச் சேர்ந்த கிப்ட் ஜேசுபாலன் செல்வநாயகம், 37 என்பவர் பாலியல் துன்புறத்தல் மற்றும் கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது.நேற்று அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்து மொபைல்போன், ஐ - பேட், லேப்டாப் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.இணையதள பின் தொடர்தல் மற்றும் இணையவழி துன்புறுத்தல்கள் ஆகியவை கடுமையான சிறை தண்டனைகளை பெறக்கூடிய குற்றங்கள் என, சென்னை போலீசார் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை