மேலும் செய்திகள்
அரசு பேருந்து மோதி ஆட்டோ ஓட்டுனர் பலி
08-Apr-2025
லாரி மோதி பைக்கில் சென்றவர் பலி
03-Apr-2025
தாம்பரம், திருச்சி, திருவெறும்பூரைச் சேர்ந்தவர் மதியழகன், 27; ஐ.டி., நிறுவன ஊழியர். இவர், கூடுவாஞ்சேரியில் உள்ள ஐ.டி., நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் இரவு, 'டியூக்' பைக்கில் ஜி.எஸ்.டி., சாலை வழியாக, தாம்பரத்தில் இருந்து கூடுவாஞ்சேரி நோக்கி சென்றார்.தாம்பரம் அடுத்த இரும்புலியூர் அருகே சென்றபோது, தாம்பரத்தில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி சென்ற அரசு பேருந்து பைக்கின் பின்னால் மோதியது.இதில், நிலைதடுமாறி கீழே விழுந்த மதியழகன், பேருந்து சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். பேருந்து ஓட்டுனரும் நடத்துனரும் அங்கிருந்து தப்பினர். குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரிக்கின்றனர்.
08-Apr-2025
03-Apr-2025