உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சென்னைக்குள் நுழைய முயன்ற லாரிகள் தடுத்து நிறுத்தம்

சென்னைக்குள் நுழைய முயன்ற லாரிகள் தடுத்து நிறுத்தம்

மறைமலை நகர், தமிழ்நாடு ஒருங்கிணைந்த மணல் மற்றும் சவுடு லாரி உரிமையாளர் சங்கங்கள் சார்பில், நேற்று காலை சிங்கபெருமாள் கோவில் ஜி.எஸ்.டி., சாலையில் இருந்து கோட்டையை நோக்கி லாரிகளுடன் பேரணி செல்லவுள்ளதாக அறிவிக்கப்பட்டு இருந்தது.இந்நிலையில், லாரிகளுடன் பேரணி செல்ல போலீஸ் அனுமதி மறுக்கப்பட்டதுஉ ஆர்ப்பாட்டம் நடத்த மட்டும் அனுமதியளிக்கப்பட்டது. சென்னை நோக்கி வந்த மணல் லாரிகள், ஜி.எஸ்.டி., சாலையில், மகேந்திரா சிட்டி 'ஜீரோ பாயின்ட்' மற்றும் ஸ்ரீபெரும்புதுார் சாலை திருக்கச்சூர் பகுதியில், ஆங்காங்கே போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டு, ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்கப்பட்டது.லாரி உரிமையாளர் சங்க கூட்டமைப்பு தலைவர், யுவராஜ் கூறியதாவது:தமிழகத்தில் கடந்த 11 மாதங்களாக மணல் அனுமதி வழங்காததால், கட்டுமான தொழில்கள் பாதிக்கப்பட்டு உள்ளன. தமிழகத்தில், காலாவதியான 32 சுங்கச்சாவடிகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும். காவல் துறையினர் சம்பந்தப்பட்ட வாகனங்களை நிறுத்தாமல், 'ஆன்லைன்' வாயிலாக அபராதம் விதிப்பதை நிறுத்த வேண்டும்.இதுகுறித்து பல மனுக்கள் அளித்தும், முதல்வரை சந்திக்க முடியவில்லை. அடுத்த கட்டமாக, முதல்வர் இல்லத்தை நோக்கி போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதையடுத்து, லாரி உரிமையாளர் சங்கங்களைச் சேர்ந்த நிர்வாக உறுப்பினர்கள் நுாற்றுக்கும் மேற்பட்டோர், கோஷங்களை எழுப்பியபடி பேரணி செல்ல முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து, தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை