உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / துாத்துக்குடி சிறைவாசி மோசடி வழக்கில் மீண்டும் கைது

துாத்துக்குடி சிறைவாசி மோசடி வழக்கில் மீண்டும் கைது

அண்ணா நகர்: துாத்துக்குடி சிறைக்கைதியை, மோசடி நபர்களுக்கு உதவிய வழக்கில் சென்னை போலீசார் மீண்டும் கைது செய்தனர். கொளத்துாரைச் சேர்ந்தவர் பிலிப் மோசஸ், 49. சமூக வலைதளத்தில் வந்த விளம்பரத்தை பார்த்து, 'ஆன்லைன்' டிரேடிங்கில் ஈடுபட்டுள்ளார். மர்ம நபர்களின் அறிவுறுத்தலின்படி, 12 தவணைகளில், 12.04 லட்சம் ரூபாய் செலுத்தியுள்ளார். ஆனால், லாபமோ, செலுத்திய பணமோ திரும்ப கிடைக்கவில்லை. ஏமாற்றப்பட்டதை அறிந்த பிலிப் மோசஸ், அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். போலீசாரின் விசாரணையில், திருவண்ணாமலையை சேர்ந்த ராஜசேகரன், 48 என்பவரது வங்கி கணக்கு என்பதும், குற்ற வழக்கில் துாத்துக்குடி சிறையில் இருப்பதும் தெரிந்தது. அவரது வங்கி, 7 கோடி ரூபாய்க்கு மேல் பணப்பரிவர்த்தனை நடந்திருப்பதும், 40க்கும் மேற்பட்ட புகார்கள் இருப்பதும் தெரிந்தது. பிலிப்மோசஸ் வழக்கு தொடர்பாக, ராஜசேகரனை, அண்ணா நகர் சைபர் கிரைம் போலீசார் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மீண்டும் துாத்துக்குடி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை