உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தலைமறைவு குற்றவாளிகள் இருவர் கைது

தலைமறைவு குற்றவாளிகள் இருவர் கைது

தண்டையார்பேட்டை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த 'மாலைக்கடை' சூர்யா என்பவரை கொலை செய்த வழக்கில், கடந்த 2021 ஜனவரியில் பழைய வண்ணாரப்பேட்டை சேர்ந்த மணிகண்டன், 28, என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்தவர், விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமறைவானார். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததையடுத்து, தண்டையார்பேட்டை போலீசார், மணிகண்டனை நேற்று கைது செய்தனர். * கடந்த 2022ல், கஞ்சா விற்ற வழக்கில் காசிமேடு போலீசாரால் லோகேஷ், 29, என்பவர் கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த லோகேஷ், நீதிமன்றத்தில் ஆஜராகாமல் தலைமுறைவானார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை