உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இரண்டரை வயது குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழப்பு

இரண்டரை வயது குழந்தை மூச்சுத்திணறலால் உயிரிழப்பு

வாலாஜாபாத், காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத், ஆசிரியர் நகரைச் சேர்ந்தவர்கள் சுரேந்தர், 34, கார்த்திகா, 28; தம்பதியின் இரண்டரை வயது ஆண் குழந்தை அதர்வ். அதர்வ் மூச்சுத்திணறல் பிரச்னையால், ஒரு வாரமாக செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, கடந்த 20ம் தேதி வீடு திரும்பியதாக கூறப்படுகிறது.நேற்று முன்தினம் இரவு, குழந்தை அதர்வ்க்கு மீண்டும் மூச்சுத்திணறல் ஏற்பட்டது. இதனால், உடல்நிலை மிகவும் மோசமானது. உடனே பெற்றோர், வாலாஜாபாத் அரசு மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர்.அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே குழந்தை உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். ஆனாலும் செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், குழந்தை இறந்ததை உறுதிப்படுத்தினர். இதுகுறித்து, வாலாஜாபாத் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ