உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தொழிலாளியை சரமாரியாக தாக்கிய இருவருக்கு காப்பு

தொழிலாளியை சரமாரியாக தாக்கிய இருவருக்கு காப்பு

பிராட்வே, மண்ணடி, சவரிமுத்து தெருவைச் சேர்ந்தவர் ஏழுமலை, 23; மீன்பாடி வண்டி ஓட்டி வருகிறார். சில தினங்களுக்கு முன், பிராட்வே, டேவிட்சன் தெருவில் ஏழுமலை நடந்து சென்றபோது, அவ்வழியே மீன்பாடி வண்டி ஓட்டி வந்த மகாதேவன் என்பவர், ஏழுமலை மீது வேகமாக மோதியுள்ளார். அப்போது, இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. மகாதேவனின் நண்பர் மோகனும் ஏழுமலையை தாக்கினார்.இந்த நிலையில், ஏழுமலை நேற்று முன்தினம் நள்ளிரவு, மண்ணடி மெட்ரோ ரயில் நிலையம் அருகே நடந்து சென்றபோது, மகாதேவன் மற்றும் மோகன், வீண் வம்பிழுத்துள்ளனர். மேலும், ஏழுமலையை மதுபாட்டிலால் மண்டையில் தாக்கினர். இதில் படுகாயமடைந்த ஏழுமலையை, அக்கம்பக்கத்தினர் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.இது குறித்து விசாரித்த எஸ்பிளனேடு போலீசார், கொலை முயற்சி பிரிவின் கீழ் வழக்கு பதிந்து, பிராட்வே, கொண்டிதோப்பு தெருவைச் சேர்ந்த மகாதேவன், 40, டேவிட்சன் தெருவைச் சேர்ந்த மோகன், 55, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி