உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வசூலிப்பாளரிடம் பணம் பறித்த இருவர் கைது

வசூலிப்பாளரிடம் பணம் பறித்த இருவர் கைது

கோயம்பேடு :பணம் வசூலிப்பாளரிடம் இருந்து 45.68 லட்சம் ரூபாயை பறித்து தப்பிய இருவரை, போலீசார் கைது செய்தனர். நெற்குன்றம் பகுதியைச் சேர்ந்தவர் சாந்தகுமார், 40; கோயம்பேடு சந்தையில் காய்கறி மொத்த வியாபாரம் செய்து வருகிறார். இவரிடம் காய்கறிகளை வாங்கும் வியாபாரிகளிடம் இருந்து தவணை முறையில் பணம் வசூலிக்கும் பணியை, சாந்தகுமாரின் கடையில் பணிபுரியும் சின்மயா நகரைச் சேர்ந்த நாராயணன், 35, என்பவர் மேற்கொள்கிறார். கடந்த 22ம் தேதி, பிராட்வே பகுதியில் உள்ள கடைகளில் வசூல் செய்த 45.68 லட்சம் ரூபாயுடன், இருசக்கர வாகனத்தில் கோயம்பேடுக்கு நாராயணன் வந்துகொண்டிருந்தார். கோயம்பேடு, எலும்பு கம்பெனி அருகே, அவரை வழிமறித்த இருவர், நாராயணனிடம் இருந்த பணப்பையை பறித்து தப்பினர். கோயம்பேடு போலீசார் வழக்கு பதிவு செய்து, இச்சம்பவத்தில் ஈடுபட்ட நெல்லை மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ் அய்யப்பன், 24, ஹாஜா மொகைதீன், 26, ஆகிய இருவரை, நேற்று முன்தினம் கைது செய்தனர். விசாரணையில், நாராயணன் பணம் வசூலிப்பதை நோட்டமிட்டு, அவரை பின்தொடர்ந்து வந்து, இருவரும் பணப்பையை பறித்தது தெரிந்தது. இருவரும் நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி