கண்ணகி நகர் மயானத்தில் கஞ்சா விற்ற இருவர் கைது
கண்ணகி நகர், கண்ணகி நகர் மயானத்தில், மறைந்திருந்து கஞ்சா விற்ற இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். கண்ணகி நகர் மயானத்தில் மறைந்திருந்து கஞ்சா விற்பதாக, கண்ணகி நகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி அங்கு சென்ற போலீசார், அந்த இடத்தில் சோதனை செய்தனர். அப்போது, சேலையூரை சேர்ந்த நடராஜன், 28, விஸ்வா, 22, ஆகியோர், கஞ்சா விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரிந்தது. நேற்று, இரண்டு பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிடம் இருந்து, 3 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.