மேலும் செய்திகள்
கஞ்சா கடத்தியவர் கைது
23-Apr-2025
வடபழனி:வடபழனி 100 அடி சாலை, தனியார் மருத்துவமனை அருகே, வடபழனி போலீசார் நேற்று அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அப்போது, அவ்வழியாக வந்த ஆட்டோவை மடக்கி சோதனை செய்தனர். அப்போது, ஆட்டோவில் வந்த மூன்று பேரில் ஒருவர் தப்பி ஓடினர்.இருவரை மடக்கி பிடித்து, அவர்களிடம் இருந்த பெட்டியை சோதனை செய்த போது, அதில் கஞ்சா இருந்தது தெரியவந்தது.விசாரணையில், பிடிபட்டவர்கள் பீகார் மாநிலத்தை சேர்ந்த சோஹரவ், 24, மற்றும் அபு சுப்யான், 24, என தெரியவந்தது.அவர்களிடம் இருந்து, ஆட்டோ மற்றும் 219 பொட்டலங்களில் இருந்த, 2 கிலோ கஞ்சா ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
23-Apr-2025