உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பைக் திருடி நம்பர் பிளேட் மாற்றி விற்ற இருவர் கைது

பைக் திருடி நம்பர் பிளேட் மாற்றி விற்ற இருவர் கைது

அண்ணா நகர்:அண்ணாநகரில் பைக் திருட்டில் ஈடுபட்ட இருவரை, போலீசார் கைது செய்தனர். அண்ணா நகர் கிழக்கு, 22வது குறுக்கு தெருவில் உள்ள விடுதியில் வசித்து வருபவர் கவுதம், 22.இவர், கடந்த 7 ம் தேதி இரவு விடுதி வாசலில், கே.டி.எம்., டியூக் பைக்கை நிறுத்திச் சென்றார். மறுநாள் காலை பார்த்தபோது, பைக் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்து, அண்ணா நகர் போலீசார் வழக்கு பதிந்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து, பைக்கை திருடிய கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்த கபிலன், 24, அர்ஜூன், 22 ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவரிடம் இருந்து, ஆறு பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. விசாரணையில், ஒரே ஊரை சேர்ந்த பட்டதாரியான இருவரும், அண்ணா நகர், திருமூலர் காலனியில் தங்கி, படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால், ஆன்லைன் உணவு டெலிவரி செய்து வந்தனர். உணவு டெலிவரி செய்ய செல்லும் இடங்களில், கண்ணில் படும் பைக்குளை குறிவைத்து திருடியுள்ளனர். அவற்றின் நம்பர் பிளேட்டை மாற்றி பயன்படுத்தியதும், ஊருக்கு எடுத்து சென்று விற்றதும் தெரியவந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை