மின் ஒயர்கள் திருடிய இருவர் கைது
புதுவண்ணாரப்பேட்டை:புதுவண்ணாரப்பேட்டையைச் சேர்ந்தவர் வசந்த், 42; வழக்கறிஞர். இவர், புதுவண்ணாரப்பேட்டை, திருவொற்றியூர் நெடுஞ்சாலை, ஜோதிமாளிகை அருகே புதிய வீடு கட்டி வருகிறார்.கடந்த 5ம் தேதி, கட்டுமான பணி நடக்கும் இவரது வீட்டின் ஒரு அறையில், 'லிப்ட்' அமைப்பதற்காக வைத்திருந்த மின் ஒயர்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இது குறித்து புதுவண்ணாரப்பேட்டை போலீசார் விசாரித்தனர்.இதில், புதுவண்ணாரப்பேட்டை, அசோக் நகர் பிரதான தெருவை சேர்ந்த சலீம் முகமது, 28, வினோத்குமார், 21, ஆகியோர் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவர் மீது ஏற்கனவே தலா நான்கு வழக்குகள் உள்ளன.