மேலும் செய்திகள்
61 மாணவியருக்கு கல்வி உதவித்தொகை
25-Mar-2025
கண்ணகி நகர்,கண்ணகி நகர் காவல் நிலைய போலீஸ்காரர்கள் உமாபதி, அஸ்வின். நேற்று முன்தினம் இரவு, கண்ணகி நகர் பேருந்து நிலையம் அருகில், வாகன சோதனை செய்து கொண்டிருந்தனர்.அப்போது, அந்த வழியாக இருவருடன் வந்த பல்சர் இருசக்கர வாகனத்தை மடக்கினர். அவர்கள் வாகனத்தை நிறுத்தாமல் சென்றனர். பின் தொடர்ந்து சென்ற போலீசார், ஒரு சந்தில் அவர்களை மடக்கி பிடித்தனர்.அப்போது, பைக்கில் வந்தவர்களுக்கும் போலீசாருக்கும் இடையே கைகலப்பு ஏற்பட்டது. இருவரும் சேர்ந்து போலீசாரை தாக்கி, அவர்கள் சீருடையை கிழித்தனர்.தொடர்ந்து, இருவரையும் மடக்கி பிடித்த போலீசார், அவர்களை காவல் நிலையம் அழைத்து சென்றனர்.விசாரணையில், அதே பகுதியை சேர்ந்த சதீஷ்குமார், 26, சஞ்சய், 24, என தெரிந்தது. போலீசார், இருவரையும் கைது செய்தனர்.
25-Mar-2025