உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சம்பள தகராறில் ஆசிட் வீச்சு இருவர் காயம்; ஒருவர் கைது

சம்பள தகராறில் ஆசிட் வீச்சு இருவர் காயம்; ஒருவர் கைது

செங்குன்றம்:மளிகை கடையில் சம்பள பாக்கி தகராறில், 'ஆசிட்' வீச்சில் இருவர் காயமடைந்தனர்; ஒருவர் கைது செய்யப்பட்டார்.செங்குன்றம், துரை அப்துல் வஹாப் தெருவில் மளிகை கடை நடத்தி வருபவர் ரங்கநாதன், 55. இங்கு, செங்குன்றம் சோலையம்மன் நகரைச் சேர்ந்த வடமாநில இளைஞர் சந்தோஷ், 19, என்பவர், மூன்று மாதமாக தினக்கூலி அடிப்படையில் வேலை செய்து வந்தார்.சில நாட்களாக சம்பளம் தராத காரணத்தால், உரிமையாளரான ரங்கநாதனிடம் தினக்கூலி கேட்டுள்ளார். ரங்கநாதனும் நாளை தருவதாக கூறி வந்ததாக கூறப்படுகிறது.இந்த நிலையில், நேற்று சம்பள பாக்கி கேட்க வந்த சந்தோைஷ, ரங்கநாதன் ஆபாசமாக திட்டியுள்ளார். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட, உடனே ரங்கநாதன் 'ஆசிட்' பாட்டில் எடுத்து சந்தோைஷ அடிக்க பாய்ந்துள்ளார். அப்போது பாட்டில் கீழே விழுந்து உடைந்து சிதறியது.இதில், சந்தோஷுக்கு முதுகிலும், கடையில் பொருள் வாங்க வந்த அதே பகுதியைச் சேர்ந்த உமாயூன், 35, என்பவருக்கும் முகம் மற்றும் கால்களிலும் காயம் ஏற்பட்டது. இருவரும் அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.செங்குன்றம் போலீசார் வழக்கு பதிந்து, ரங்கநாதனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி