வாசகர்கள் கருத்துகள் ( 1 )
பங்களாதேஷி கூட்டம். இது நாட்டின் பல பகுதிகளில் நடக்கிறது.
ஆவடி, ஆள் இல்லாத வீடுகளை நோட்டமிட்டு, 40 சவரன் நகைகள், 2.50 லட்சம் ரொக்கப் பணத்தை திருடி, மேற்கு வங்கத்திற்கு தப்பிய இருவரை போலீசார் கைது செய்தனர். ஆவடியை அடுத்த பொத்துார், உப்பரப்பாளையம், பொக்கிஷம் நகரைச் சேர்ந்தவர் ரஞ்சித், 44; தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 11ம் தேதி, குடும்பத்துடன் பூர்விக ஊரான கேரளாவிற்கு சென்றார். இந்நிலையில், 13ம் தேதி வீடு திறந்து கிடப்பதாக, அக்கம்பக்கத்தினர் ரஞ்சித்திற்கு தகவல் தெரிவித்தனர். ரஞ்சித் வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த, 3 சவரன் தங்க நகை திருடு போனது தெரிந்தது. மற்றொரு சம்பவம் உப்பரப்பாளையம், விஷால் நகரைச் சேர்ந்தவர் சாமிவேல், 49; வயரிங் கான்ட்ராக்டர். கடந்த 17ம் தேதி, குடும்பத்துடன் சொந்த ஊரான வேலுார், பொத்தேரி கிராமத்துக்கு குடும்பத்துடன் சென்றார். பின், 20ம் தேதி இரவு திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் வைத்திருந்த, 40 சவரன் தங்க நகைகள், 2.50 லட்சம் ரூபாய் ரொக்கம் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து, ஆவடி டேங்க் பேக்டரி போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபர்களை தேடி வந்தனர். சம்பவம் தொடர்பாக, 90 பேரின் கைரேகைகளை பதிவு செய்தனர். அப்பகுதியில் பதிவான, 'சிசிடிவி' காட்சிகளையும் ஆய்வு செய்தனர். சந்தேகத்தில், ஆவடி விஷால் நகரில் கட்டட வேலை செய்து வந்த, மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ராஜு ஷேக், 34 ; அவரது தம்பி அங்கூர்ஷேக், 32, ஆகிய இருவரையும், 25ம் தேதி தனிப்படை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த ஹிலால், 35, ஜல்தான், 37 ஆகியோருடன் கூட்டு சேர்ந்து, பல நாட்களாக நோட்டமிட்டு, இரண்டு வீடுகளில் கைவரிசை காட்டியது தெரிய வந்தது. இதையடுத்து, இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையில் தனிப்படை போலீசார், 26ம் தேதி, மேற்கு வங்கம் சென்று, ஹிலால், ஜல்தான் ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, ஆரம், நெக்லஸ், டாலர் செயின், உட்பட, 118 கிராம் தங்க நகைகள், 200 கிராம் உருக்கப்பட்ட தங்க கட்டிகள் என, 39.75 சவரன் நகைகள், 2.39 லட்சம் ரூபாய் ரொக்கத்தையும் மீட்டனர். விசாரணைக்கு பின், கடந்த 27ம் தேதி, மேற்கு வங்கத்தில் உள்ள நீதிமன்றத்தில் இருவரையும் ஆஜர்படுத்தி, 'டிரான்சிட் வாரன்ட்' பெறப்பட்டு, நேற்று சென்னை அழைத்து வரப்பட்டனர். பின், அம்பத்துார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, நேற்று சிறையில் அடைக்கப்பட்டனர். ராஜு ஷேக், அங்கூர் ஷேக் ஆகிய இருவரும் ஏற்கனவே சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர்.
பங்களாதேஷி கூட்டம். இது நாட்டின் பல பகுதிகளில் நடக்கிறது.