உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / திருட்டு வழக்கில் சிறுவன் உட்பட இருவர் கைது

திருட்டு வழக்கில் சிறுவன் உட்பட இருவர் கைது

சென்னை, மேற்கு மாம்பலத்தை சேர்ந்தவர் தனசேகர், 25; பிரபல துணிக்கடையில் வேலை பார்த்து வருகிறார். கடந்த, 14ம் தேதி அன்று இரவு மது அருந்திவிட்டு, திருவல்லிக்கேணி, பெல்ஸ் சாலையோரம் உறங்கி உள்ளார். சிறிது நேரம் கழித்து எழுந்து பார்த்தபோது, சட்டையில் வைத்திருந்த, 7,000 ரூபாய் திருடுபோனது தெரியவந்தது.திருவல்லிக்கேணி போலீசார் வழக்கு பதிந்து விசாரித்ததில், திருவல்லிக்கேணியை சேர்ந்த ரவிசங்கர், 20 மற்றும் 17 வயது சிறுவன் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இருவரையும் போலீசார் கைது செய்து, ரவிசங்கரை புழல் சிறையிலும், சிறுவனை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர்.கைது செய்யப்பட்ட ரவிசங்கர் மீது, இரு குற்ற வழக்குகள் உள்ளன.***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை