கொலை வழக்கில் திருநங்கை உட்பட இருவர் கைது
சென்னை, திருவல்லிக்கேணி, மாட்டங்குப்பத்தைச் சேர்ந்தவர் சீனிவாசன், 45 ; மெரினா ஊர்க்காவல் படை வீரர். நேற்று முன்தினம் மெரினா கடற்கரை நேதாஜி பின்புறமுள்ள மணற்பரப்பில், 45 வயது நபர் ரத்தக்காயங்களுடன் இறந்து கிடப்பதை பார்த்து, மெரினா போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் விசாரணை நடத்தியதில், இறந்தவர் சூளை, கண்ணப்பர் திடல் அருகே உள்ள திடீர் நகரைச் சேர்ந்த வெங்கடேசன், 43 என்பது தெரியவந்தது.ராயப்பேட்டை ஜானி பாஷா தெருவைச் சேர்ந்த ராகேஷ்குமார், 25 மற்றும் 17 வயது திருநங்கை இருவரும் மணற்பரப்பில் அமர்ந்து சாப்பிட வந்தபோது, வெங்கடேஷ் தொல்லை கொடுத்ததால், மூங்கில் கம்பு மற்றும் பாட்டிலால் தாக்கி கொலை செய்தது தெரியவந்தது.இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.