உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / டூ - வீலர் திருடிய பெண் உட்பட இருவர் கைது

டூ - வீலர் திருடிய பெண் உட்பட இருவர் கைது

பள்ளிக்கரணை:பள்ளிக்கரணையை சேர்ந்தவர் மகேஷ். கடந்த 26ந் தேதி மதியம், தன் வீட்டு முன் நிறுத்தி வைத்திருந்த, அவரது 'ஹோண்டா டியோ' இருசக்கர வாகனம் திருடுபோனது. இதுகுறித்த புகாரின்படி, பள்ளிக்கரணை குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தியதோடு, அப்பகுதியில் இருந்த 'சிசிடிவி' கேமரா பதிவுகளையும் ஆய்வு செய்தனர். இதில், பள்ளிக்கரணை, ஆதிதாங்கல் பகுதியில் குடியிருக்கும் ஆனந்த், 40, என்பவருடன், ஒரு பெண்ணும் டூ - வீலரை திருடி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, ஆனந்தை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்த டூ - வீலரை மீட்ட போலீசார், அவரிடம் மேலும் விசாரித்ததில், சம்பவத்தன்று அவருடன் இருந்தது, அவரின் மனைவியின் தங்கை ஜெயலட்சுமி, 25, என்பதும், இவர்கள் இருவரும் சேர்ந்தே திருடியதும் தெரியவந்தது. அதன்படி, ஜெயலட்சுமியும் கைது செய்யப்பட்டார். இருவரிடமும் விசாரித்ததில், சில மாதங்களுக்கு முன், கோவிலில் திருடியதும், மதுரவாயல் பகுதியில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டதும் தெரிந்தது. இருவர் மீதும் வழக்கு பதிவு செய்த போலீசார், அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை