உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாமியாரிடம் செயின் பறித்த மருமகள் உட்பட இருவர் கைது

மாமியாரிடம் செயின் பறித்த மருமகள் உட்பட இருவர் கைது

தாம்பரம்:மாமியாரிடம் செயின் பறித்த வழக்கில், மருமகள் உட்பட இருவர் கைது செய்யப்பட்டனர். தாம்பரம் வ.உ.சி., தெருவைச் சேர்ந்தவர் சுப்புலட்சுமி, 72. வயது மூப்பு காரணமாக, வீட்டின் கீழ் தளத்தில் படுத்த படுக்கையாக வசித்து வருகிறார். இவரது இரு மகன்கள் வீட்டின் மேல் தளத்தில் வசிக்கின்றனர். கடந்த 27ம் தேதி, சுப்புலட்சுமியின் இரு மகன்கள், மருமகள்கள் உள்ளிட்ட அனைவரும், திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க, வெளியே சென்றிருந்தனர். சுப்புலட்சுமி மட்டும் வீட்டில் தனியாக இருந்தார். வெளியே சென்றவர்கள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சுப்புலட்சுமி கழுத்தில் அணிந்திருந்த மூன்றரை சவரன் செயின் மாயமாகி இருந்தது. கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தபோது, ஹெல்மெட் அணிந்து வந்த பெண் ஒருவர், செயினை பறித்து சென்றது தெரிய வந்தது. இது குறித்து தாம்பரம் போலீசார் விசாரித்தனர். இதில், செயின் பறிப்பில் ஈடுபட்டது, சுப்புலட்சுமின் இரண்டாவது மருமகள் ரேவதி, 47 மற்றும் அவரது சகோதரி சுமதி, 55 என்பது தெரிய வந்தது. சுமதியை போலீசார் பிடித்து விசாரித்தபோது, தங்கை ரேவதியுடன் சேர்ந்து திட்டமிட்டு, செயினை பறித்ததாக தெரிவித்துள்ளார். இருவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை