மேலும் செய்திகள்
காதலிக்க மறுத்த பெண்ணை தாக்கிய வாலிபர் கைது
26-Oct-2024
புதுவண்ணாரப்பேட்டை, புதுவண்ணாரப்பேட்டை, அசோக் நகர் 1வது தெருவைச் சேர்ந்த பாப்பம்மாள், 80, நேற்று முன்தினம் இரவு, கதவை பூட்டாமல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தார்.அப்போது, பெண் உட்பட இருவர், வீட்டினுள் புகுந்து மூதாட்டியின் செயினை பறித்து செல்ல முயன்றனர். மூதாட்டி கூச்சலிட்டுள்ளார். சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், செயின் பறிப்பில் ஈடுபட்ட இருவரையும் பிடித்து நையப்புடைத்து, புதுவண்ணாரப்பேட்டை போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில், பிடிப்பட்டவர்கள், புதுவண்ணாரப்பேட்டை, அசோக் நகர் 2வது தெருவைச் சேர்ந்த ஜெயந்தி, 34, தங்கராஜ், 38, என்பதும், இருவரும் சேர்ந்து வசிப்பதும் தெரிந்தது.ஜெயந்தியின் தங்கை லட்சுமி, மூதாட்டி பாப்பம்மாளின் வீட்டில் வாடகைக்கு குடியிருந்த நிலையில், சமீபத்தில் காலி செய்துள்ளார்.லட்சுமி மூலம் மூதாட்டி தனியாக வசிப்பதை தெரிந்து கொண்ட ஜெயந்தி, தங்கராஜுடன் சேர்ந்து, செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளார்.இருவரையும் நேற்று காலை கைது செய்த போலீசார், விசாரணைக்கு பின் சிறையில் அடைத்தனர்.
26-Oct-2024