உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / காரை திருப்பி தராத விவகாரம் இருவர் கடத்தல்; மூவர் கைது

காரை திருப்பி தராத விவகாரம் இருவர் கடத்தல்; மூவர் கைது

சென்னை: அடமானம் வைக்க கொடுத்த காரை திருப்பி தராதது குறித்து ஏற்பட்ட தகராறில், நண்பர் உட்பட இருவரை காரில் கடத்தி தாக்கிய மூவரை, போலீசார் கைது செய்தனர். சென்னை, வாணுவம்பேட்டையைச் சேர்ந்தவர் சரவணன், 33. இவர், தன் நண்பர் சிவகுமாரிடம், 'மாருதி சுஸுகி பிரெஸ்ஸா' அடமானம் வைத்து, 2 லட்சம் ரூபாய் பெற்றுத்தரும்படி கேட்டுள்ளார். சிவகுமார் தனக்கு தெரிந்த நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த கண்ணன், 53 என்பவர் மூலம், கன்னியாகுமரியைச் சேர்ந்த பின்னி என்பவரிடம் கொடுத்து, 2 லட்சம் ரூபாய் பெற்றுள்ளனார். அதில், சிவகுமார் ஒரு லட்சம் எடுத்துக்கொண்டு, சரவணனிடம் 1 லட்சம் ரூபாயை கொடுத்துள்ளார். நான்கு மாதமாக கழித்து, காரை திருப்பி கேட்டபோது, 'வட்டி தராததால், காரை விற்றுவிட்டேன்' என, பென்னி கூறியுள்ளதாக கூறப்படுகிறது. சரவணன் தன் நண்பர்களுடன், சிவக்குமார் மற்றும் கண்ணனை திருவல்லிக்கேணியில் உள்ள மதுக்கூடத்திற்கு, இதுதொடர்பாக பேச நேற்று வரவைத்துள்ளனர். அப்போது இரு தரப்பு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த சரவணன் தரப்பு, சிவகுமார் மற்றும் கண்ணனை காரில் கடத்தியது. அப்போது, கண்ணனுடன் வந்திருந்த அரவிந்தன் என்பவர், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்துள்ளார். விசாரித்த திருவல்லிக்கேணி இன்ஸ்பெக்டர் பிரகாஷ் தலைமையிலான போலீசார், அயோத்தியகுப்பம் பகுதியில் காரை மடக்கி அதிரடியாக இருவரையும் மீட்டனர். கடத்தலில் ஈடுபட்ட, சரவணன், 33, சிவானந்தம், 45, முரளி, 39 ஆகிய மூவரை, கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !