உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / கூலி தொழிலாளியை வெட்டிய இருவர் கைது

கூலி தொழிலாளியை வெட்டிய இருவர் கைது

ஓட்டேரி: ஓட்டேரியில், கன்று குட்டியை தாக்கியதை தடுத்த நாகராஜ், 42, என்பவரை வெட்டிய வழக்கில், பெரம்பூரைச் சேர்ந்த இருவரை, போலீசார் கைது செய்தனர். ஓட்டேரி அடுத்த, பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் வசிப்பவர் நாகராஜ், 42; மாடுகளை பராமரிக்கும் வேலை செய்து வருகிறார். கடந்த 7ம் தேதி, ‘டோபி கானா’ சென்னை மாநகராட்சி பூங்கா அருகே, தன் கன்று குட்டியை கட்டி வைத்திருந்தார். அங்கு வந்த மர்ம நபர்கள், மது போதையில் கன்று குட்டியை அடித்து கொண்டிருந்தனர். இதை தடுத்த நாகராஜை, கத்தியால் வெட்டி, மர்ம நபர்கள் தப்பினர். பலத்த காயமடைந்த அவர், சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். ஓட்டேரி போலீசார் விசாரித்து, பெரம்பூர் ராஜீவ் காந்தி நகரைச் சேர்ந்த விஜயகுமார், 28, சந்தோஷ், 27, ஆகியோரை, நேற்று கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ