உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மது போதையில் தாக்கிய இரு வாலிபர்கள் கைது

மது போதையில் தாக்கிய இரு வாலிபர்கள் கைது

அண்ணா நகர், அனகாபுத்துாரைச் சேர்ந்தவர் சண்முகம், 32. இவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி சங்கீதா, வழக்கறிஞராக படித்து வருகிறார்.சண்முகம், மனைவி மற்றும் பிள்ளைகளுடன், தன் சொந்த ஆட்டோவில் நேற்று முன்தினம் இரவு, அண்ணா நகரில் உணவு அருந்திவிட்டு, வீட்டுக்கு புறப்பட்டார்.இரண்டாவது அவென்யூ, டவர் மெட்ரோ ரயில் நிலையம் அருகில் ஆட்டோவை திருப்பினார்.அப்போது, சினிமா இயக்குனர் கவுதமனின் மகன் திருவேற்காட்டைச் சேர்ந்த தமிழழகன், 24, அவரது நண்பர் சரத், 20, ஆகிய இருவரும் வந்த 'நிசான்' கார், ஆட்டோ மீது மோதுவது போல் வந்துள்ளது.இதில், அவர்களுக்கும் சண்முகத்திற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, குடி போதையில், காரில் இருந்து இறங்கிய தமிழழகன் மற்றும் சரத், சண்முகத்தை சரமாரியாக தாக்கியதில் அவர் காயமடைந்தார். அண்ணா நகர் போலீசார், சண்முகத்தை மீட்டு சிகிச்சைக்காக அதே பகுதி தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.மேலும், வழக்கு பதிந்த போலீசார், தமிழழகன் மற்றும் சரத் ஆகிய இருவரையும் கைது செய்து, காவல் நிலைய ஜாமினில் இருவரும் விடுவிக்கப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ