மேலும் செய்திகள்
திருநங்கை அடித்து கொலை
26-Jul-2025
வியாசர்பாடி,:திருநங்கையை வெட்டிய இருவரை போலீசார் கைது செய்தனர். வியாசர்பாடி, கல்யாணபுரம், மூன்றாவது தெருவை சேர்ந்தவர் பூமிகா, 26; திருநங்கை. இவர் தன் வீட்டில், சில திருநங்கையருடன் வசித்து வந்தார். பூமிகா நேற்று தன் வீட்டருகே நின்றிருந்தபோது, அதே பகுதியை சேர்ந்த பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரூபன், வித்திஷ்குமார் ஆகியோர், பூமிகாவை குடிபோதையில் தவறு செய்ய அழைத்தனர். பூமிகா வர மறுக்கவே ரூபன் கத்தியால், பூமிகாவின் இடது கையை வெட்டி விட்டு தப்பினார். இதில், படுகாயமடைந்த பூமிகாவை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். வியாசர்பாடி போலீசார் வழக்கு பதிந்து, சம்பவத்தில் ஈடுபட்ட வியாசர்பாடி, கல்யாணபுரத்தைச் சேர்ந்த ரூபன், 24; வித்திஷ்குமார், 23, ஆகியோரை நேற்று கைது செய்தனர்.
26-Jul-2025