மேலும் செய்திகள்
பேட்டி பல்கலை ஊழியர் ஊதியம் குறைப்பு நியாயமற்றது
07-Aug-2025
சென்னை, சென்னை பல்கலை பேராசிரியர்கள், அலுவலர்கள் ஊதிய குறைப்பு பரிந்துரையை, சிண்டிகேட் குழு வாபஸ் பெற்றுள்ளது. சென்னை பல்கலை சில ஆண்டுகளாக, நிதி நெருக்கடியில் சிக்கிவருகிறது. இதனால், பேராசிரியர்கள் மற்றும் அலுவலர்களின் ஊதியத்தை, 10,000 முதல் 30,000 ரூபாய் வரை குறைக்க முடிவு செய்தது. இதற்கு, சிண்டிகேட் கூட்டத்தை கூட்டி, ஒப்புதல் பெற திட்டமிட்டது. ஆனால், பேராசிரியர்கள், அலுவலர்கள் அடங்கிய கூட்டுநடவடிக்கை குழு, இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து, தொடர் போராட்டங்களை நடத்தியது. இதனால், சிண்டிகேட் கூட்டங்கள் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், கடந்த 18 ம் தேதி நடந்த கூட்டத்தில், ஊதிய குறைப்பு தொடர்பான பரிந்துரையை, சிண்டிகேட் குழு வாபஸ் பெற்றுள்ள தகவல்கள் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக, பல்கலை வட்டாரங்கள் கூறுகையில், 'தொடர் போராட்டம் காரணமாக, ஊதிய குறைப்பு பரிந்துரையை, சிண்டிகேட் குழு வாபஸ் பெற்றுள்ளது. புதிய நியமனங்களுக்கு, புதிய ஊதிய நடைமுறையை அமல்படுத்த ஆலோசனை நடந்து வருகிறது' என்றனர். ***
07-Aug-2025