உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வில் குறைபாடுகள் களைய வலியுறுத்தல்

மாற்றுத்திறனாளிகள் பதவி உயர்வில் குறைபாடுகள் களைய வலியுறுத்தல்

சென்னை,அரசு பணியாளர்கள் பதவி உயர்விற்கான நான்கு சதவீத இடஒதுக்கீடு உத்தரவில் உள்ள குறைபாடுகளை களைய வேண்டும் என, மாற்றுத்திறனாளிகள் வலியுறுத்தியுள்ளனர். அரசுப்பணி மாற்றுத்திறனாளிகள் நலச்சங்கத்தின் மாநில தலைவர் சந்திரகுமார் கூறியதாவது: அரசு பணியிலுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, பதவி உயர்வில் 4 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும் என்பது எங்களின் நீண்ட நாள் கோரிக்கை. தினமலர் நாளிதழில், கடந்த மார்ச் மாதம் இது தொடர்பான செய்தி வெளியிட்டதன் பலனாக, அதற்கான உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மத்திய அரசு, மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வு அளிக்க, ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது. தமிழக அரசின் உத்தரவில் சில குறைபாடுகள் உள்ளன. அவற்றை சரி செய்ய வேண்டும். தமிழக அரசு உத்தரவு, கடந்த ஜூன் 21ம் தேதி முதல் செயல்படுத்தப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மாற்றுத்திறனாளிகள் உரிமை பாதுகாப்பு சட்டம் - 2016 முதல் அமல்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, 2016ம் ஜூன் 30ம் தேதி முதல், மாற்றுத்திறனாளிகளுக்கு பதவி உயர்வில் 4 சதவீத முன்னுரிமை அளித்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மத்திய அரசு சுற்றறிக்கையில், வழிகாட்டு நெறிமுறைகளில் பதவி உயர்வு அளிக்க ஏதேனும் விதிகள் தடையாக இருந்தால், அதனை தளர்த்தி பதவி உயர்வு அளிக்கலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசும், குறைந்தபட்சம் ஐந்து பணி இடங்கள் இருந்தால் மட்டுமே, பதவி உயர்வுக்கு இந்த உத்தரவு செல்லும் என்பதை தளர்த்தி, மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்களுக்கு பதவி உயர்வில் முன்னுரிமை அளிக்க வேண்டும். மத்திய அரசு சுற்றிக்கையில் உள்ளதுபோல, 'ரோஸ்டர் சிஸ்டம்' வாயிலாக பதவி உயர்வு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ