உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / சிறுகளத்துார் விளையாட்டு மைதானத்தை நவீன அரங்கமாக மேம்படுத்த வலியுறுத்தல்

சிறுகளத்துார் விளையாட்டு மைதானத்தை நவீன அரங்கமாக மேம்படுத்த வலியுறுத்தல்

குன்றத்துார், குன்றத்துார் அருகே உள்ள சிறுகளத்துார் ஊராட்சியில், ஏழு ஏக்கர் பரப்பளவில் விளையாட்டு மைதானம் உள்ளது. இங்குள்ள கால்பந்து மைதானத்தில், மாவட்டம் மற்றும் மாநில அளவிலான கிளப் அணிகளுக்கிடையேயான கால்பந்து போட்டிகள் அடிக்கடி நடக்கின்றன.மேலும், சிறுகளத்துார் மற்றும் அதை சுற்றியுள்ள சிறுவர்கள், இளைஞர்களுக்கு இலவசமாக கால்பந்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.மைதானத்தை சுற்றி, 400 மீட்டர் ரன்னிங் டிராக் அமைக்கப்பட்டுள்ளது. வாலிபால், கபடி, கோகோ ஆகிய விளையாட்டுகளுக்கும் தாராளமாக இட வசதி உள்ளது.எனவே, இந்த மைதானத்தை, தமிழக விளையாட்டு துறை அமைச்சகம் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து, விளையாட்டு அரங்கம் அமைக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.இதுகுறித்து விளையாட்டு ஆர்வலர்கள் கூறியதாவது:சிறுகளத்துார் ஊராட்சியைச் சுற்றியுள்ள பகுதியில், அரசு பள்ளி, கல்லுாரிகள் அதிகம். இங்கு, தரம் வாய்ந்த கால்பந்து மைதானம் இல்லை. சிறுகளத்துாரில் உள்ள கால்பந்து மைதானத்தை விளையாட்டு அரங்கமாக மாற்றினால், மூன்று மாவட்ட எல்லையில் உள்ள மாணவர்கள், இளைஞர்கள் என, பலர் பயன்பெறுவர்.இங்கு, பார்வையாளர் கேலரி, உடை மாற்றும் அறை, கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்த வேண்டும். 2023ல், தொகுதிக்கு ஒரு விளையாட்டு அரங்கம் அமைக்கப்படும் என, அன்றைய விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி அறிவித்தார்.இந்த அடிப்படையில், ஸ்ரீபெரும்புதுார் தொகுதிக்கான விளையாட்டு அரங்கத்தை, சிறுகளத்துாரில் அமைக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

கால்பந்தில் அசத்தும்

எஸ்.கே.எப்.சி., கிளப்சிறுகளத்துார் ஊராட்சியில் அடங்கிய கிராமம் கலாட்டிபேட்டை. 15 ஆண்டுகளுக்கு முன் அடிதடி, வெட்டு, குத்து என, ரவுடியிசத்தின் அடையாளமாக இந்த ஊர் திகழ்ந்தது.தற்போது, இந்த ஊர் இளைஞர்கள் கால்பந்தாட்டத்தில் மாவட்டம், மாநிலம், தேசிய அணிகளில் தடம் பதித்து வருகின்றனர்.கடந்த 2014ல், சிறுகளத்துார் கலாட்டிபேட்டை கால்பந்து கிளப் - எஸ்.கே.எப்.சி., துவங்கப்பட்டு, ஆர்வமுள்ள இளம் விளையாட்டு வீரர்களுக்கு இலவசமாக இந்த கிளப் சார்பில் பயிற்ச்சி அளிக்கப்பட்டு வருகிறது.இங்கு பயிற்சி பெற்றும் வீரர்கள், பல்வேறு கல்பந்து போட்டிகளில் விளையாடி சாதித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை