உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துவதற்காக எத்தனை வழக்குகளையும் எதிர்கொள்ள தயார் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குநர் பால கவுதமன் பேட்டி

பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துவதற்காக எத்தனை வழக்குகளையும் எதிர்கொள்ள தயார் வேத விஞ்ஞான ஆராய்ச்சி மைய இயக்குநர் பால கவுதமன் பேட்டி

சென்னை : '' இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பயங்கரவாதத்தை அம்பலப்படுத்துவதாலும் எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும், எதிர்கொள்ள தயார்,'' என, வேத விஞ்ஞான ஆராய்ச்சி மையத்தின் இயக்குநர் பால கவுதமன் கூறினார். சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலக வளாகத்தில் நேற்று, செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தேனி மாவட்டம் கம்பத்தைச் சேர்ந்த உஸ்தாத் பீர் முகமது சதக்கி அஷ் அரி என்பவர் பேசிய வீடியோவை சமூக வலை தளத்தில் பார்த்தேன். அதில், இந்திய இறையாண்மைக்கு எதிராகவும், பயங்கரவாதத்தை துாண்டும் விதமாக பேசி இருந்தார். இதற்கு விளக்கம் அளித்து, 'ஸ்ரீ டிவி' எனும் யு டியூப் சேனலில் பேட்டி அளித்தேன். இதற்காக என் மீது, சென்னை மாநகர போலீசின் மத்திய குற்றப் பிரிவு சமூக வலைதள பிரிவு போலீசார் வழக்கு பதிந்துள்ளனர். அவர்களின் சம்மனை ஏற்று, காலை 11:00 மணிக்கு விசாரணைக்கு ஆஜரானேன். என்னிடம், 31 கேள்விகளுக்கு பதில்கள் பெறப்பட்டன. இக்கேள்விகளின் அடிப்படையில், என்னிடம் இன்ஸ்பெக்டர் சுஜாதா வாக்குமூலம் பெற்றார். துலுக்கர் என்ற வார்த்தையை பயன்படுத்துவதால், அவர்களின் மனம் புண்படாதா என, விசாரணை அதிகாரி கேள்வி எழுப்பினார். துலுக்கர் என்ற பெயரில் அறக்கட்டளை பதிவு செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினத்தில் துலுக்கர் என்ற பெயரை பயன்படுத்தி, சட்ட ரீதியாக சொத்து பதிவு செய்யப்பட்டுள்ளது. துலுக்கர் பெயரில் தெருக்கள் மற்றும் ஊர்கள் இருப்பதை விசாரணை அதிகாரிக்கு சுட்டிக் காட்டி உள்ளேன். அல்லாவின் மனைவியர், சுற்றத்தார் மற்றும் குடும்பத்தார், உறவினர்கள் கூறிய கருத்துக்கள், ஹதீஸ் என்பதில் சொல்லப்பட்டு உள்ளது. இந்த ஹதீசை பின்பற்றி தான், மொகலாயர்கள், திப்பு சுல்தான் உள்ளிட்டோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர். இதே ஹதீசை சுட்டிக்காட்டி தான், உஸ்தாத் பீர் முகமதுவும் விஷமத்தனத்தை கக்கி இருப்பதை, விசாரணை அதிகாரிக்கு விளக்கமாக எடுத்துரைத்தேன். எவர் மனதையும் புண்படுத்த வேண்டும் என்பது என் நோக்கம் அல்ல. ஆனால், இந்திய இறையாண்மைக்கு எதிராக பேசுவோரின் முகத்திரையை கிழிப்பேன். பயங்கரவாதிகளுக்கு எதிராக போராடிக் கொண்டே இருப்பேன். அவர்களை அம்பலப்படுத்துவதால், என் மீது எத்தனை வழக்குகள் பாய்ந்தாலும் சட்ட ரீதியாக எதிர்கொள்வேன். இவ்வாறு அவர் கூறினார். உடன் கவுன்சிலர் உமா ஆனந்தன், தமிழக பா.ஜ., கொள்கை பரப்பு செயலர் ஓமாம்புலியூர் ஜெயராமன், மூத்த பத்திரிக்கையாளர் வெங்கடாதிரி, ஸ்ரீ டிவி பங்குதாரர் சீனிவாசன் உள்ளிட்டோர் இருந்தனர். ***


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை