உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / போரூர் ஈரநில பசுமை பூங்காவில் வாகனம் திருட்டு

போரூர் ஈரநில பசுமை பூங்காவில் வாகனம் திருட்டு

போரூர்,போரூர் அடுத்த, காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்தவர் நாராயணன், 30. இவர், தன் நண்பர்களுடன் கடந்த 19ம் தேதி, போரூர் செட்டியார் அகரம் சாலையில் புதிதாக திறக்கப்பட்ட ஈரநில பசுமை பூங்காவிற்கு சென்றார்.அவர் வந்த 'ராயல் என்பீல்ட்' இருசக்கர வாகனம், பூங்காவின் வாகன நிறுத்தத்தில் நிறுத்தப்பட்டிருந்தது. திரும்பி வந்தபோது மாயமானது.நாராயணன் புகாரை, போரூர் போலீசார் விசாரிக்கின்றனர். அங்குள்ள 'சிசிடிவி' கேமரா பதிவில், வாலிபர் ஒருவர் லாவகமாக இருசக்கர வாகனத்தின் 'லாக்'கை உடைப்பது தெரிந்தது. இக்காட்சியை வைத்து போலீசார் விசாரிக்கின்றனர்.புதிதாக திறக்கப்பட்ட பூங்காவில் வாகனங்கள் திருட்டு நடப்பது, அங்கு வருவோரிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை