உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / இ.சி.ஆரில் விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனங்கள்

இ.சி.ஆரில் விபத்தில் சிக்கி பள்ளத்தில் கவிழ்ந்த வாகனங்கள்

நீலாங்கரை:இ.சி.ஆரில், ஆட்டோ மீது லோடு வேன் மோதி, இரண்டு வாகனங்களும், சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்ட பள்ளத்தில் கவிழ்ந்தன. இதில், ஆட்டோ ஓட்டுநருக்கு காயம் ஏற்பட்டது. இ.சி.ஆர்., நீலாங்கரையில் இருந்து அக்கரை நோக்கி, ஏழுமலை, 43, என்பவர் தனது ஆட்டோவை ஓட்டி சென்றார். ஈஞ்சம்பாக்கம் அருகில் சென்றபோது, சாலையோரம் ஆட்டோவை நிறுத்தினார். அப்போது, அதிவேகமாக வந்த லோடு வேன், ஆட்டோ மீது மோதியது. இதில், ஆட்டோ, லோடு வேன் ஆகியவை, சாலை விரிவாக்கப் பணிக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளத்தில் கவிழ்ந்தன. இந்த விபத்தில், ஏழுமலைக்கு லேசான காயம் ஏற்பட்டது. சம்பவத்திற்கு யார் காரணம் என, இரண்டு வாகன ஓட்டுநர்களும் தகராறு செய்தனர். இதனால், இ.சி.ஆரில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்குப்பதிவு செய்து, லோடு வேன் ஓட்டுநர் அருண், 30, என்பவரை பிடித்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை