உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வேலுார் இப்ராகிம் கைது

வேலுார் இப்ராகிம் கைது

சென்னை, உடல் உறுப்பு தானம் குறித்து விசாரிக்க சென்ற, பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் வேலுார் இப்ராகிமை, போலீசார் கைது செய்தனர். பா.ஜ., சிறுபான்மை அணி தேசிய செயலர் வேலுார் இப்ராகிம், 52. இவர், நேற்று காலை, சென்னை ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனைக்கு சென்றார். உடல் உறுப்பு தான ஆணையத்தில் உள்ள டாக்டர்களை சந்தித்து, உடல் உறுப்பு தானம் குறித்து விவரம் கேட்கப்போவதாக கூறினார். போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர். அப்போது, போலீசாருக்கும், அவருக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. போலீசார், அவரை தடுத்து கைது செய்தனர். கைதான அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார். 'தி.மு.க., ஆட்சியில் கிட்னி திருட்டு நடக்கிறது. அதுகுறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்த விடாமல் போலீசார் தடுக்கின்றனர்' என, வேலுார் இப்ராஹிம் கூறினார். இப்ராஹிம் கைதுக்கு, தமிழக பா.ஜ., தலைவர் நயினார் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ