உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி வரும் 24ல் சென்னையில் ஏற்பாடு

விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி வரும் 24ல் சென்னையில் ஏற்பாடு

சென்னை: தமிழகத்தில் உள்ள சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள், வாகனங்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்களுக்கான உதிரிபாகங்கள் உள்ளிட்ட பல்வேறு பொருட்களை உற்பத்தி செய்கின்றன. ஆனால், பெரும்பாலான நிறுவனங்களுக்கு, தங்களின் தயாரிப்புகளை பொதுத்துறை நிறுவனங்களுக்கு விற்பனை செய்வதற்கான வழிமுறைகள் தெரியவில்லை. இதற்கான வழியை ஏற்படுத்தவும், சந்தையை உருவாக்கும் வகையிலும், தமிழக அரசின், ‘பேம் டி.என்.,’ நிறுவனம் சார்பில், விற்பனையாளர் மேம்பாட்டு நிகழ்ச்சி, தி.நகரில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டலில் வரும் 24ம் தேதி நடக்கவுள்ளது. இதில், ‘சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்பரேஷன், பாரத் டைனமிக்ஸ், அசோக் லேலண்ட்’ உள்ளிட்ட நிறுவனங்கள் பங்கேற்கின்றன. தங்களுக்கு தேவையான பொருட்கள், அவற்றை விநியோகம் செய்வதற்கான வழிமுறைகள் உள்ளிட்ட விபரங்களை, இந்நிறுவனங்களின் பிரதிநிதிகள் விளக்க உள்ளனர். இதில் பங்கேற்க விரும்பும் நிறுவனங்கள் பதிவு செய்வது உள்ளிட்ட விபரங்களை 044 -– 2953 0112, 2953 0113 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !