உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பணிகள் முடிந்தும் திறக்கப்படாத வேங்கைவாசல் சுகாதார நிலையம்

பணிகள் முடிந்தும் திறக்கப்படாத வேங்கைவாசல் சுகாதார நிலையம்

சேலையூர்:சேலையூரை அடுத்த வேங்கைவாசல் ஊராட்சியில், 12 வார்டுகள் உள்ளன. இவ்வூராட்சியில் ஆரம்ப சுகாதார நிலையம் இல்லை. அதனால், அவ்வூராட்சி மக்கள், காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு மேடவாக்கம் அல்லது மாடம்பாக்கத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சென்று, சிகிச்சை பெறுகின்றனர். வளர்ச்சியடைந்து வரும் இவ்வூராட்சியில், பொதுமக்களின் வசதிக்காக, ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து, 15வது நிதிக்குழு மானிய திட்டத்தின் கீழ், 1.28 கோடி ரூபாய் செலவில், வேங்கைவாசல் பிரதான சாலையில், சமுதாய நலக்கூடம் அருகே ஆரம்ப சுகாதார நிலைய கட்டடம் கட்டும் பணி துவங்கியது. தற்போது, பணிகள் முடிந்து பல மாதங்கள் ஆகியும், அக்கட்டடம் திறக்கப்படாமல் மூடியே வைக்கப்பட்டுள்ளது. அக்கட்டடத்தை, நுாறு நாள் வேலை திட்ட பெண்கள், ஓய்வெடுக்க பயன்படுத்தி வருகின்றனர். இதனால், இவ்வூராட்சி மக்கள், வழக்கம் போல் மேடவாக்கம் அல்லது மாடம்பாக்கத்திற்கே சென்று வருகின்றனர். அதனால், இந்த ஆரம்ப சுகாதார நிலையத்தை திறந்து, பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை