அய்யப்பன்தாங்கலில் வி.ஜி.என்., 30 ஏக்கரில் வீட்டுமனை
சென்னை, சென்னையில் புகழ்பெற்ற ரியல் எஸ்டேட் நிறுவனங்களில் ஒன்றாக வி.ஜி.என்., ஹோம்ஸ் நிறுவனம் உள்ளது. இந்நிறுவனம், போரூர் அருகே பிரதான பகுதியான அய்யப்பன்தாங்கலில், 30 ஏக்கரில், 570 வீட்டுமனைகளுடன் கூடிய பெரிய பகுதிக்கான விற்பனையை துவங்கியுள்ளது.இது, தமிழக ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையம், டி.டி.சி.பி., ஆகியவற்றின் அங்கீகாரத்தை பெற்றது. இங்கு, 500 சதுர அடி முதல் 3,000 சதுர அடி வரையிலான வீட்டு மனைகள் கிடைக்கின்றன. 1 சதுர அடி 7,999 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.மனைகளின் விலை, 54 லட்சம் ரூபாயில் இருந்து 2.74 கோடி ரூபாய் வரை உள்ளது. ரியல் ஸ்டேட் துறையில் முதல்முறையாக, மங்களகரமான பிரம்ம முகூர்த்த விற்பனையை அதிகாலை 3:30 மணி முதல், அதிகாலை 5:30 மணி வரையிலான நேரத்தில் நடத்துகிறது.இந்த நேரத்தில், 'ஸ்பாட் புக்கிங்' செய்தால், 5 லட்சம் ரூபாய் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இந்த இடத்தை பார்வையிடவும், பதிவு செய்யவும் இலவசமாக, 'பிக் அப், டிராப்' வசதிகளை வி.ஜி.என்., நிறுவனம் செய்கிறது. வி.ஜி.என்., கிராண்டியர் வீட்டு மனைகள் நிலத்தடி மெட்ரோ குடிநீர், கழிவு நீர் வசதி, மின் வசதி, குழாய் வாயிலாக இயற்கை எரிவாயு, மழை நீர் வடிகால் உள்ளிட்ட வசதிகளை உள்ளடக்கிஉள்ளன.