உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வித்யார்த்தி வடுக்களை அமரவைத்து பூஜை

வித்யார்த்தி வடுக்களை அமரவைத்து பூஜை

சேலையூர், ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹாசுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில் நடந்து வரும் நவராத்திரி மகோத் சவத்தில் நேற்று, வித்யார்த்தி வடுக்கள் அனைவரையும் ஒன்று சேர அமரவைத்து, பூஜை செய்யப்பட்டது. காஞ்சி மடாதிபதி விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் மற்றும் இளைய மடாதிபதி சத்ய சந்திரசேகரேந்திர சரஸ்வதி சுவாமிகள், தாம்பரம் அடுத்த ராஜகீழ்ப்பாக்கத்தில் உள்ள காஞ்சி மஹா சுவாமி வித்யா மந்திர் பள்ளி வளாகத்தில், சாரதா நவராத்திரி மகோத்சவத்தை நடத்தி வருகின்றனர். நவராத்திரி மகோத்சவத்தின் ஒரு பகுதியாக நேற்று, பூஜா மண்டப வளாகத்தில் சரஸ்வதி ஆவாஹனம் செய்யப்பட்டது. வித்யார்த்தி வடுக்கள் அனைவரையும் ஒன்று சேர அமரவைத்து, அனைவருக்கும் பூஜை செய்யப்பட்டது. தொடர்ந்து, வித்யார்த்திகளுக்கு அனுக்கிரக பாஷணத்தில் அறிவுரை வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !