உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / தடுத்து நிறுத்திய போலீசார் விஜய் கட்சியினர் மறியல்

தடுத்து நிறுத்திய போலீசார் விஜய் கட்சியினர் மறியல்

பரங்கிமலை:சிவானந்தா சாலையில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, ஜி.எஸ்.டி., சாலையில் செல்ல போலீசார் அனுமதிக்காததால், த.வெ.க.வினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.சென்னை, சிவானந்தா சாலையில், தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் தலைமையில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பங்கேற்க, தாம்பரம், பல்லாவரம், குரோம்பேட்டை சுற்றுப்புற பகுதி த.வெ.க., கட்சியினர், பல்லாவரம் - துரைப்பாக்கம் ரேடியல் சாலை வழியாக செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.ஆனால், ஜி.எஸ்.டி.,சாலை வழியாக த.வெ.க.,வினர் புறப்பட்டனர். அதனால், பரங்கிமலை சிமென்ட் ரோடு சிக்னல் அருகே வாகனங்களை நிறுத்திய போலீசார், 'தனி வழி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், அந்த வழியாக செல்லுங்கள்' என அறிவுறுத்தினர்.அதை கேட்காத கட்சியினர், சாலை ஓரங்களில் வாகனத்தை நிறுத்தி, சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. அப்போது, போலீசாருடன் வாக்குவாதம் செய்து, கைகலப்பில் ஈடுபட்டனர்.நீண்ட நேர பேச்சுக்கு பின், பொதுமக்கள் பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக, அவர்களை அதே வழியாக அனுமதித்தனர். இதனால் ஜி.எஸ்.டி., சாலையில் பரபரப்பு ஏற்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை