உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வாலிபால் லீக் போட்டி சென்னை அணி ஏமாற்றம்

வாலிபால் லீக் போட்டி சென்னை அணி ஏமாற்றம்

சென்னை, தமிழ்நாடு மாநில வாலிபால் சங்கம் சார்பில், எஸ்.என்.ஜே., தமிழ்நாடு வாலிபால் லீக் போட்டிகள், சென்னை மயிலாப்பூரில் உள்ள சாந்தோம் பள்ளியில் நடக்கின்றன.சென்னையில், முதல் முறையாக நடக்கும் இப்போட்டியில், சென்னை ராக்ஸ்டார்ஸ், விழுப்புரம் சூப்பர் கிங்ஸ், கிருஷ்ணகிரி புல்ஸ், விருதுநகர் கிங் மேக்கர்ஸ், குமரி பீனிக்ஸ், கடலுார் ஆகிய ஆறு அணிகள், பலப்பரீட்சை நடத்துகின்றன. போட்டியில், ஆறு அணிகளும், 'ரவுண்ட் ராபின்' முறையில் விளையாடி, ஒரு அணி மட்டும் நேரடியாக இறுதி போட்டிக்கு முன்னேறும். தினமும் மாலையில் இரு போட்டிகள் விதம் நடக்கின்றன.நேற்று முன்தினம் இரவு நடந்த முதல் போட்டியில், கடலுார் மற்றும் சென்னை ராக்ஸ்டார்ஸ் அணிகள் மோதின. அதில், 3 - 2 என்ற கணக்கில் கடலுார் அணி வெற்றி பெற்றது.முதல் போட்டியில் சென்னை அணி தோல்வியடைந்ததால், ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. மற்றொரு போட்டியில், கிருஷ்ணகிரி அணி, 3 - 2 என்ற கணக்கில் விழுப்புரம் அணியை தோற்கடித்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை