வாக்காளர் பட்டியல் அ.தி.மு.க., மனு
தண்டையார்பேட்டை:ஆர்.கே.நகர், பெரம்பூர் தொகுதிகளில், ஓட்டுச்சாவடி அலுவலர் சரிபார்த்த பின்பே, வாக்காளர் பட்டியல் வெளியிட வேண்டும் என, அ.தி.மு.க., சார்பில் தண்டையார்பேட்டை மண்டல அலுவலரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.இது குறித்து, தண்டையார்பேட்டை மண்டல அலுவலர் சரவணமூர்த்தியிடம் அ.தி.மு.க., மாவட்ட செயலர் ஆர்.கே.ராஜேஷ் அளித்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:ஆர்.கே.நகர், பெரம்பூர் சட்டசபை தொகுதிகளில், வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க தேர்தல் கமிஷனுக்கு ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.ஆர்.கே.நகர் தொகுதியில் முதல் கட்டமாக வீடு, வீடாக சென்று வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி நடக்கிறது. அதில், இறப்பு, இடமாற்றம், இரட்டை பதிவு உள்ளிட்டவை மாற்றப்படாமல் குளறுபடிகள் இருப்பது தெரியவந்தது. எனவே, ஓட்டுச்சாவடி நிலை அலுவலர் நேரில் சென்று சரிபார்த்த பின், வாக்காளர் பட்டியல் விபரங்களை வெளியிட வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.