உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / வியாசர்பாடி நபர் தீக்குளித்து தற்கொலை

வியாசர்பாடி நபர் தீக்குளித்து தற்கொலை

எம்.கே.பி.நகர், வியாசர்பாடி, மூர்த்திங்கர் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பைச் சேர்ந்தவர் செல்வம், 47. இவருக்கு, திருமணமாகி இரு பிள்ளைகள் உள்ளனர். கருத்து வேறுபாடு காரணமாக, தம்பதி பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.செல்வம், தன் தாய் குப்பம்மாளுடன் வசித்து வந்தார். மதுபோதைக்கு அடிமையான செல்வம், குப்பம்மாளுடன் தொடர்ந்து தகராறில் ஈடுபட்டு வந்தார்.இந்நிலையில், நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில், செல்வம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி, தனக்கு தானே தீ வைத்து கொண்டு, தற்கொலைக்கு முயன்றார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி