வாடெல்ஸ் சாலைக்கு எஸ்றா சற்குணம் பெயர் சூட்டல்
கீழ்ப்பாக்கம், கீழ்ப்பாக்கம் வாடெல்ஸ் சாலைக்கு, 'பேராயர் எஸ்றா சற்குணம் சாலை' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. கீழ்ப்பாக்கம் இறையியல் கல்லுாரியின் அமைப்பாளரும், பேராயருமான எஸ்றா சற்குணம், 86, உடல் நலக்குறைவால், கடந்த செப்., 22ல் இறந்தார். அவர் வாழ்ந்த கீழ்ப்பாக்கம், வாடெல்ஸ் சாலைக்கு நேற்று, 'பேராயர் எஸ்றா சற்குணம் சாலை' என, பெயர் சூட்டப்பட்டது. சாலைக்கான பெயர் பலகையை, அமைச்சர் நேரு திறந்து வைத்தார். இதுகுறித்து எஸ்றா சற்குணத்தின் மகள் கதிரொளி மாணிக்கம் கூறுகையில், ''எங்கள் கோரிக்கையை ஏற்று, சாலையின் பெயரை 'பேராயர் எஸ்றா சற்குணம்சாலை' என, முதல்வர்ஸ்டாலின் மாற்றிக் கொடுத்துள்ளார். இதைப் பெரிய அங்கீகாரமாக நினைக்கிறோம்,'' என்றார்.