மேலும் செய்திகள்
மருத்துவ நிர்வாக பயிற்சி
5 minutes ago
பாரதி பாசறையின் 14 ஆண்டு தொடர் சொற்பொழிவு நிறைவு
8 minutes ago
துணை முதல்வர் வருகை போக்குவரத்து ஸ்தம்பிப்பு
8 minutes ago
பள்ளிக்கரணை: வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலை, பள்ளிக்கரணை பகுதியில், குழாய் சேதமடைந்து, பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. பெருங்குடி மண்டலம், வார்டு 189க்கு உட்பட்டது பள்ளிக்கரணை. இங்குள்ள, வேளச்சேரி - தாம்பரம் பிரதான சாலை பல பகுதிகளை இணைப்பதால், ஒரு மணி நேரத்தில், 3,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் கடக்கின்றன. இந்நிலையில், நாராயணபுரம் மேம்பாலத்தில் இருந்து, காமகோட்டி நகர் சிக்னல் வரை, 50 மீட்டர் இடைவெளியில், மூன்று இடங்களில் குடிநீர் பிரதான குழாய் சேதமடைந்து, பல மாதங்களாக குடிநீர் வீணாகி வருகிறது. இதனால், குறிப்பிட்ட இடங்களில், சாலையில் ஒரு அடி ஆழம் வரை பள்ளம் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருவதோடு, போக்குவரத்து நெரிசலும் ஏற்படுகிறது. தவிர, என்.ஐ.ஓ.டி., பேருந்து நிறுத்தத்தில் குளம் போல் நீர் தேங்கியிருப்பதால், பயணியர் நிறுத்தத்தை பயன்படுத்த இயலாமல், சாலையிலேயே பேருந்துக்காக காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. பல மாதங்களாக இதே நிலை நீடிப்பதாகவும், குடிநீர் வாரிய அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருப்பதாகவும், வாகன ஓட்டிகள் மற்றும் அப்பகுதி மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆய்வு செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும் என, அப்பகுதி மக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
5 minutes ago
8 minutes ago
8 minutes ago