உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / 7 மண்டலங்களில் 3 நாட்களுக்கு குடிநீர் கட்

7 மண்டலங்களில் 3 நாட்களுக்கு குடிநீர் கட்

சென்னை,குழாய் இணைப்பு பணிக்காக, சென்னையில் ஏழு மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சில பகுதிகளில், மூன்று நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தப்பட உள்ளது. பூந்தமல்லி புறவழிச்சாலையில், 2,000 விட்டம் உடைய குடிநீர் பிரதான குழாய்களை இணைக்கும் பணி நடைபெற உள்ளது. இதனால், வரும் 30, 31 மற்றும் ஆக., 1ம் தேதிகளில், அம்பத்துார், அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம், ஆலந்துார், அடையாறு ஆகிய மண்டலங்கள் மற்றும் தாம்பரம் மாநகராட்சியின் சில பகுதிகளில், குழாய் மூலம் குடிநீர் வழங்குவது நிறுத்தப்படும். பொதுமக்கள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தேவையான குடிநீரை சேமித்து வைக்க வேண்டும். அவசர தேவைக்கு, https://cmwssb.tn.gov.inஎன்ற இணையதளத்தில் முன்பதிவு செய்து லாரி குடிநீர் பெற்றுக் கொள்ளலாம். இணைப்பு இல்லாத, அழுத்தம் குறைவான பகுதிகளில் வாரியம் மூலம் லாரி குடிநீர் வழங்கப்படும் என, குடிநீர் வாரிய அதிகாரிகள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை